ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகளாக்குவதா? நீலகிரியில் போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகளாக்குவதா? நீலகிரியில் போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ் மக்களை வஞ்சிக்கும் இந்த அரசுக்கு எதிராக நீலகிரியில் வரும் 20ஆம் தேதி போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த இந்திய தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகள் ஆக்குவதை கண்டித்து வரும் 20ஆம் தேதி கூடலூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  மேலும், இவர்களில் சுமார் 15,076 பேர் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள். இவர்கள் இன்று வரைக்கும் தமிழக அரசின் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றதாகவும் கருதினார்.

  ஆனால் 'டான்டீ' நிர்வாக இயக்குனர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், 'டான்டீ' வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை, அந்த நிறுவனத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்க பரிந்துரைத்தாக தெரிவித்தார். டான்டீ நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று, நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசும் ஒரு அரசாணையையும் வெளியிட்டது.

  இதையும் படிங்க | கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவர்.. எங்கே போகிறது மாணவர் சமுதாயம் - அன்புமணி ராமதாஸ் வருத்தம்

  நிர்வாக இயக்குனரின் பரிந்துரைப்படி டான்டீ நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5.98 கோடி மிச்சமாகும் என்றும் இந்த சிறிய தொகைக்காக இடம்பெயர்ந்த மக்களை அகதிகள் ஆக்குவதா என்பதை கூட தமிழக அரசு சிந்திக்கவில்லை என கூறினார்.

  அரசின் இந்த முடிவால் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. டான்டீ நிர்வாகம், வேலைக்காக வேறு தோட்டங்களுக்கு செல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்பதால், 2,400 குடும்பங்கள் மற்றும் 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இப்படி மக்களை வஞ்சிக்கும் இந்த அரசுக்கு எதிராக நீலகிரி மாவட்டம், கூடலூரில் வருகிற 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுக்கும். அதில் நானும் நேரடியாக கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Protest