ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டி.. ஸ்டாலின் கர்ஜிக்கிறாரு..'' சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

''தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டி.. ஸ்டாலின் கர்ஜிக்கிறாரு..'' சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

முதலமைச்சர் ஸ்டாலின், சுப்பிரமணியன் சுவாமி, அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின், சுப்பிரமணியன் சுவாமி, அண்ணாமலை

தமிழக பாஜகவை சுப்பிரமணியன் சுவாமி நேரடியாக விமர்சித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திமுகவை எதிர்ப்பதில் தமிழ்நாடு பாஜக பூனைக்குட்டிகள் போல செயல்படுகிறது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கர்ஜித்து வருகிறார் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

பாஜக கட்சியில் இருந்தாலும் கட்சி தொடர்பாக தொடர்ந்து பல விமர்சனங்களை முன்வைத்து  வருபவர் சுப்பிரமணியன் சுவாமி.

சமீபத்தில் கொலிஜியம் விவகாரத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு பேசியது தவறு எனவும் கொலிஜியம் முறை சரியாக செயல்படுவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக குறித்து விமர்சித்து ட்வீட் செய்துள்ள அவர், “தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்க்கிறேன் என நினைக்கிறேன். தமிழ்நாடு பாஜக முழுக்க பூனைக்குட்டிகள் தான் இருக்கின்றனர். ஸ்டாலின் கர்ஜிக்கும் போது தமிழ்நாடு பாஜக பூனை போல கத்துகிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை கெடுத்துவிட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் மூலம்,  தமிழக பாஜகவை சுப்பிரமணியன் சுவாமி நேரடியாக விமர்சித்துள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Annamalai, BJP, CM MK Stalin, Subramanian Swamy