”மகளிரணி நிர்வாகிகள் மீது பைக்கில் மோதி திமுக வட்டசெயலாளர் அராஜகம்” - தமிழக பாஜக கண்டனப் போராட்டம் அறிவிப்பு

சென்னையில் 7 இடங்களில் திமு வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது என பாஜக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

”மகளிரணி நிர்வாகிகள் மீது பைக்கில் மோதி திமுக வட்டசெயலாளர் அராஜகம்” - தமிழக பாஜக கண்டனப் போராட்டம் அறிவிப்பு
பாஜக மாநில அலுவலகம்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 11:17 AM IST
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட சுவர் விளம்பரங்களை கிழித்ததாகவும், திமுக பகுதி செயலாளர் பாஜக நிர்வாகிகளை மிரட்டியதாகவும், பாஜக மகளிரணி நிர்வாகிகள் மீது இரு சக்கர வாகனத்தால் மோதி காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, திமுகவை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது

முன்னதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை நங்கநல்லூரில் பிரதமர் மோடி பிறந்த நாள் முன்னிட்டு பாஜகவினர் சுவர் விளம்பரம் செய்து இருந்தார்கள். இந்த விளம்பரங்களை திமுக நிர்வாகிகள் அழித்துள்ளனர். இதையடுத்து பாஜகவினர் அங்கு கூடியுள்ளனர்.


அப்போது அங்குவந்த திமுக பகுதிசெயலாளர் சந்திரன், பாஜகவினர் மிரட்டியுள்ளனர். திமுக வட்ட செயலாளர் நடராஜன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து பாஜக மகளிரணி நிர்வாகிகள் மீது மோதி காயப்படுத்தியுள்ளனர். காவல்துறையினர் இருக்கும்போது, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 
பாஜக அறிவிப்பு
பாஜக வளருது திமுக பதறுது’ என்பதுபோல், பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுகவினர் பதற தொடங்கிவிட்டனர் என்பதற்கு நங்கநல்லூர் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு சம்பவம். இதை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் எல். முருகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று 22.09.2020 காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள மாவட்டங்களின் சார்பில் சென்னையில் 7 இடங்களில் திமுக அராஜக போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டாம் நடைபெற இருக்கிறது.

இவ்வாறு பாஜக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading