கும்பிட்டு, குழந்தை போல தவழ்ந்து பதவி பெறவில்லை - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி பேச்சு

கும்பிட்டு, குழந்தை போல தவழ்ந்து பதவி பெறவில்லை - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
தமிழக சட்டசபை
  • News18
  • Last Updated: July 4, 2019, 12:37 PM IST
  • Share this:
தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர், செந்தில் பாலாஜி, “கும்பிடு போட்டோ, குழந்தை போல நடந்தோ பதவியை பெறவில்லை” என்று கூற திமுக - அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில், “யாரையும் கும்பிட்டு போட்டு தலைவர் பதவி பெறவில்லை. குழந்தை போல் தவிழ்ந்து பதவி பெறவில்லை. தமிழகத்தின் எதிர்காலம் மு.க ஸ்டாலின்” என்று பேசுகையில் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனை அடுத்து நடந்த வாக்குவாதம் பின்வருமாறு:


முதல்வர்: கும்பிட்டு, குனிந்து பதவி பெற்றதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டது தவறு. 3 ஆண்டுகளில் எத்தனை மாறி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும்

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்: செந்தில் பாலாஜி காட்சி மாறியதாக பேசும், முதல்வர் அருகில் அமர்ந்திருக்கும் துணை முதல்வர் தர்ம யுத்த காலத்தில் பேசுயதைப் பற்றி பேசுவாரா?

துணை முதல்வர்: எங்கள் இயக்கத்துக்காக தான் தர்மயுத்தம் செய்தோம். சுயநலத்திற்காக கட்சிகளை மாறவில்லை. செந்தில் பாலாஜியின் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை கழற்றி உட்கார வையுங்கள். செந்தில் பாலாஜி குணிந்து குணிந்து பதவி வாங்கியது படங்கள் என்னிடம் உள்ளது. காட்டவா?

Loading...

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்: நீங்கள் தவழ்ந்து தவழ்ந்து பதவி வாங்கிய வீடியோ உள்ளது. காட்டவா?

இதனை அடுத்து, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது மு.க ஸ்டாலின் குறித்து பேசியதை, எடப்பாடி பழனிசாமி வாசித்துக்காட்டினார்.

துரைமுருகன்: ஒரு கட்சியில் இருக்கும் உறுப்பினர் அக்கட்சியின் கொள்கை போக்கு பிடிக்காமல் வேறு கட்சிக்கு வருவது இயல்பான ஒன்று. ஆனால், முன்பு பேசியதை எடுத்து விமர்சிப்பது நாகரீகமான போக்கு அல்ல.

இரு தரப்பு வாதங்களால் இன்றைய சட்டசபையில் பரபரப்பு மேலோங்கி இருந்தது. தொடர்ந்து அவையில் வாதங்கள் நடந்து வருகிறது.

செந்தில் பாலாஜி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து, டிடிவி தினகரன் ஆதரவாளாக சென்றதால், பதவியை இழந்து, பின்னர் திமுகவுக்கு வந்து அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வென்று திமுக எம்.எல்.ஏ ஆக தற்போது சட்டமன்றத்தில் இருக்கிறார்.

First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...