ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TN Assembly | தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - இன்று மசோதா தாக்கல்

TN Assembly | தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை - இன்று மசோதா தாக்கல்

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை

"பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்பிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் "

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது.

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைப்பெறுகிறது.

பேரவை துவங்கியதும் வினா-விடை நேரம் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, எம். ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.

தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்கட்சிகள் முக்கிய பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புவர். அதனைத் தொடர்ந்து அரசினர் சட்ட முன்வடிகள் அறிமுகம் செய்யப்படும்.

2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டமுன்வடிவு மற்றும் தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் பணிகளில் முன்னுரியின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் தொடர்பான சட்டமுன் வடிவை அறிமுகம் செய்ய மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அனுமதி கோருவார். பின்னர் அதனை அறிமுகம் செய்வார்.

அதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைப்பெறும்.

அதிமுக, திமுக சார்பில் சக்கரபாணி மற்றும் காந்தி, காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ் ஆகிய உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசுவார்கள்.

அதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து பேசுவார்.

அரசுப் பணியிடங்களில் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு 20% வரை முன்னுரிமை அளிக்க மசோதா வழிவகை செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த முன்னுரிமையைப் பெற பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் 10 மற்றும் 12-ம் வகுப்பிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்று தகவல்கள் கூறுகின்றன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:

Tags: TN Assembly