ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாளை கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அரசு அறிவிக்கப் போகும் திட்டங்கள் என்னென்ன?

நாளை கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அரசு அறிவிக்கப் போகும் திட்டங்கள் என்னென்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவச பயணம், கொரோனா சிறப்பு நிவாரணம், சென்னையில் அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனை மதுரை நூலகம் குறித்து ஆளுநர் உரையில் இடம் பெற வாய்ப்புள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது ஆளுநர் உரையில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்கள் என்னென்ன? புதிய அரசு அறிவிக்கப் போகும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த ஆவல் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் துவங்குகிறது.

முன்னதாக அவைக்கு வரும் தமிழக ஆளுநரை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வர்.

அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரை துவங்கும், அதில் திமுக தலைமையிலான அரசு அடுத்தடுத்து செய்யப்போகும் திட்டங்கள் என்னென்ன? புதிய அரசினுடைய செயல்பாடுகள் தற்போது வரை அரசு செய்துள்ள சாதனைகள், புதிய அரசு பொறுப்பேற்ற உடன் அறிவித்த திட்டங்கள் குறித்தும், இனி செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கும்.

மேலும் படிக்க: தொன்மையான ஓலைச்சுவடிகளை விற்க முயற்சி: சர்ச்சையில் சரஸ்வதி மஹால் நூலகம்..

குறிப்பாக புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவச பயணம், கொரோனா சிறப்பு நிவாரணம், சென்னையில் அமைய உள்ள பல்நோக்கு மருத்துவமனை மதுரை நூலகம் குறித்து ஆளுநர் உரையில் இடம் பெற வாய்ப்புள்ளது.

தமிழக ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையாற்றுவார்.அதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டு முதல்வர் , அவை முன்னவர் சபாநாயகர் சட்டப்பேரவை செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் , அனைத்து சட்டமன்ற கட்சியினுடைய குழு தலைவர்கள் கலந்து கொள்ளும் அலுவல் ஆய்வுக்கூட்டம் சட்டப்பேரவையின் வளாகத்தில் நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

அதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அறிவிப்பார். இதனைத் தொடர்ந்து, மறைந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

அதற்கு அடுத்த நாள் ஆளுநர் உரை மீதான விவாதமும் நடைபெறும். இதில் எதிர்க்கட்சி மற்றும் சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆளுநர் உரை மீதான விவாதத்தை முன் வைப்பர்.

இதையும் படிங்க: இந்த மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி...

* நடைபெறவுள்ள முதல் கூட்டத் தொடரிலேயே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம், புதிய கல்விக் கொள்கை, மேகதாது அணை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், தேனி நியூட்ரினோ திட்டம் , சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் குறித்த தீர்மானங்களும், நிதி மேலாண்மை குறித்த அறிவிப்புகளும், அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி மற்றும் கட்டுபள்ளி துறைமுகம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை உள்ளிட்டவை குறித்து முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் பிரச்சனையை எழுப்புவதற்கும் வாய்ப்புள்ள சூழலில் கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் உரை நிகழ்த்துவார்.

செய்தியாளர்: பாண்டியராஜ்

Published by:Murugesh M
First published:

Tags: MK Stalin, Tamilnadu government, TN Assembly