Tamil news live updates : அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட் - குடியரசு தலைவர் ஒப்புதல்!

Breaking News, Today (October 17, 2022 - Tuesday): இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

  • News18 Tamil
  • | October 17, 2022, 19:09 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:4 (IST)

    அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட் - குடியரசு தலைவர் ஒப்புதல்!

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ.லலித்தின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ ஒப்புதல் அளித்துள்ளார்.


    16:31 (IST)

    இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளன - உயர்நீதிமன்ற மதுரை கிளை

    திருச்சியை சேர்ந்த அபிராமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாக்கல் செய்த மனுவில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் துன்புறுத்தப்பட்டு இந்தியா வந்துள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க குடியுரிமைச் சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதில், இலங்கை இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்  இந்தியாவில் பிறந்த தனக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படுவதாகவும் தனக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
     
    இந்த மனு மீதான விசாரணையில் இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சமமாக சாத்திய கூறுகள் உள்ளன என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    14:58 (IST)

    அதானி நிறுவனத்திற்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி!

    திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    13:31 (IST)

    இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்.. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?” என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “நான் இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன்” என கூறினார்.

    12:14 (IST)

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் : ராகுல் காந்தி வாக்களித்தார்

    அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் கர்நாடகவில் ராகுல் காந்தி வாக்களித்தார்

    12:0 (IST)

    19-ம் தேதி இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது- கார்த்திக் சிதம்பரம் எம்.பி 

    காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்த பின் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கார்த்திக் சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய முழு ஆதரவு சசி தரூருக்குதான். நாளை மறுநாள் ( 19ம் தேதி) வாக்கு எண்ணிக்கையின் போது, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது ‘என்றார். 


    11:45 (IST)

    எம்.பி ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

    இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    11:44 (IST)

    சொத்துகள் விற்பனை விவகாரம் : நடிகர் பிரபுவுக்கு எதிரான சகோதரிகள் மனு தள்ளுபடி!

    சொத்துகளில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக சாந்தி, ராஜ்வி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    11:34 (IST)

    அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா ; எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை

    அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    11:30 (IST)

    காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியா, பிரியங்கா காந்தி வாக்களிப்பு

    அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சோனியா "இந்த நாளுக்காக, நான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தேன்" என்றார்.