ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள்...இரங்கல் தீர்மானம்

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள்...இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றம்

மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேரா உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையாற்றிய நிலையில், அரசு தயாரித்த கொடுத்த அறிக்கையை படிக்கவில்லை என குற்றம்சாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். இது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில்  சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், வரும் வெள்ளிக்கிழமை வரை கூட்டத் தொடரை நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு அவை கூடியதும், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா, தமிழறிஞர் நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராஜன், கால்பந்து வீரர் பீலே உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளையும், நாளை மறுதினமும் விவாதம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறார்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

First published:

Tags: AIADMK, DMK, TN Assembly