TN Assembly Election Result 2021 : போடி தொகுதியில் ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த தங்கதமிழ்செல்வன்

TN Assembly Election Result 2021 : போடி தொகுதியில் ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த தங்கதமிழ்செல்வன்

ஓ.பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    போடிநாயக்கனூர் தொதியில் போட்டியிட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் முன்னிலையில் இருக்கிறார்.

    போடி நாயக்கனூர் தொகுதியில் முதல் சுற்றில் முன்னிலையில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இரண்டாம் சுற்றில் பின்னடைவில் உள்ளார். இரண்டாம் சுற்று முடிவில் தங்கதமிழ்செல்வன் 6538 வாக்குள் பெற்றுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 6414 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் உள்ளதால் வரும் சுற்றுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 130 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 103 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

    நெய்வேலி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கோ.ஜெகன் திமுக வேட்பாளர் ராஜேந்திரனைவிட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.



    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்
    Published by:Vijay R
    First published: