TAMILNADU ASSEMBLY ELECTION 2021 UNION MINISTER AMIT SHAH KANNYAKUMARI VIST VJR
சுசீந்திரம், நாகர்கோவிலில் வீதி, வீதியாக சென்று பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் அமித் ஷா
அமித்ஷா
கீழ ரத வீதியில் நடைபயணமாக சென்று வீடு வீடாக துண்டு பிரசாரம் வழங்கி அமித் ஷா பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார்.
பாஜகவின் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து சுசீந்திரத்தில் அமித் ஷா வீடு, வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் வந்தடைந்தார். பின்னர் கார் மூலம் சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயன் கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு செண்டைமேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், கீழ ரத வீதியில் நடைபயணமாக சென்று வீடு வீடாக துண்டு பிரசாரம் வழங்கி அமித் ஷா பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார்.
கன்னியாகுமரி, சுசீந்திரத்தில் @BJP4TamilNadu சார்பில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்!
பிரதமர் திரு.@narendramodi தலைமையின்கீழ், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது
பாஜக-அஇஅதிமுக கூட்டணியை பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்க வேண்டுமென தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறேன்! pic.twitter.com/canAV17XfN
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, செட்டிக்குளம் பகுதியில் 'வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்' என்ற தலைப்பில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார்.