தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா

தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

 • Share this:
  தமிழகத்தில் அதிக அளவு தேர்தல் செலவு நடக்கும் என்பதால், இரண்டு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா அறிவித்தார்.

  தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

  இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். அப்போது, 5 மாநில தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டும் தபால் வாக்கு அளிக்கலாம் என்றார். மேலும் தமிழகத்துக்கு செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

  மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: