தமிழக சட்டமன்ற தேர்தல் : 234 தொகுதிகளில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் போட்டி?

தமிழக சட்டமன்ற தேர்தல் : 234 தொகுதிகளில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் போட்டி?

மாதிரிப்படம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 4133 பேர் போட்டியிட உள்ளனர்.

 • Share this:
  ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக 6 ஆயிரத்து 183 ஆண்கள், ஆயிரத்து 69 பெண்கள் 3 திருநங்கைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றின் மீதான பரிசீலனையின் போது, 4443 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2742 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  380 பேர் நேற்று தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

  இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 133 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை மற்றும் பவானிசாகர் தொகுதியில் 6 பேரும் போட்டியிடுகின்றனர்.

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடியில் 28 பேரும் போடியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 24 பேரும் போட்டியிடுகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூரில் 35 பேர் போட்டியிடுகின்றனர்.

  கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 26 பேர் களத்தில் உள்ளனர்.

  திருவொற்றியூரில் சீமான் உள்பட 20 பேரும் விருத்தாசலத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர்.
  Published by:Vijay R
  First published: