முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Tamilnadu assembly election 2021: எந்தப்பட்டணை அழுத்தினாலும் இரட்டைஇலையில் விளக்கு எரிவதாக புகார் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Tamilnadu assembly election 2021: எந்தப்பட்டணை அழுத்தினாலும் இரட்டைஇலையில் விளக்கு எரிவதாக புகார் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

வாக்குப் பதிவு இயந்திரம்

வாக்குப் பதிவு இயந்திரம்

கனியாம்பூண்டி வாக்குச்சாவடியில் புகார் எழுந்ததையடுத்து அங்கு 10 முதல் 15 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

  • Last Updated :

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்தே பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது.

கனியாம்பூண்டி வாக்குச்சாவடியில் தான் இந்தப்புகார் எழுந்தது. இதனையடுத்து அங்கு 10 முதல் 15 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. தற்போது அங்கு தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியிடம் பேசிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன், “ இது தவறான தகவல். விவிபேடில் யாரோ தவறாக பார்த்து தவறான தகவலை பரப்பியுள்ளனர். செவி வழிச்செய்தியாக இது அப்படியே பரப்பியுள்ளது. புகார் எழுந்த கனியம்பூண்டி வாக்குச்சாவடியில் சென்றுப் பார்த்தோம். சோதனை செய்ததில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்வதது, வழக்கம் போல் வாக்குப்பதிவு தொடர்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் காலையில் இருந்தே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துவருகிறது. ஒரு சில இடங்களில் ஈவிஎம் இயந்திரம் மாற்றும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக அவற்றை மாற்றும் பணி செய்யப்பட்டது. 50 சதவீதமான பூத்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம்” என்றார்.

First published:

Tags: ADMK, DMK, Election, Tamilnadu, Tirupur, TN Assembly Election 2021