கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் - மு.க.ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார் மு.க.ஸ்டாலின்.

 • Share this:
  கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை ஆழ குழிதோண்டி புதைப்போம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

  "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பரப்புரை வாயிலாக, தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கோவை கொடிசியா அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற பரப்புரையின் போது மக்களின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார், அங்கு திரண்டிருந்த மக்கள் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

  இதனைதொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின், சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தவர் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று குற்றஞ்சாட்டினார். ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம், 12 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து இருப்பதாகவும் புகார் கூறினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் முதலில் 17 கோடியாக இருந்தது எனவும், இப்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் எனவும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை அழ குழிதோண்டி புதைப்போம் எனவும் தெரிவித்தார்.

  நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டதாக விமர்சித்த ஸ்டாலின், கருணாநிதி மறைந்த போது அவரை அடக்கம் செய்ய 6 அடி இடம் கொடுக்காத இந்த ஆட்சியாளர்களுக்கு, தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
  Published by:Vijay R
  First published: