திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேதிசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திமுக தனது பெரும்பான்மையான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடை உறுதி செய்துவிட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உடன் திமுக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொமதேக உடன் நடைபற்ற இரண்டுக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே கொமதேக, அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக 3 தொகுதிகள் ஒதுக்கி இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கொங்கு மண்டலத்தில் தங்களின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் தான் கொமதேக-விற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியால் தான் ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. இதனால் கொங்கு மண்டலத்தில் தங்களது பலத்தை அதிகரிக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது.