திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

அண்ணா அறிவாலயம்

5 தொகுதிகள் கேட்டுள்ளோம், நாளை தான் முடிவு தெரியும் என்று காதர் மொகதீன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்றும் 5 தொகுதிகள் கேட்டிருக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகதீன் தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்காக தேசிய கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாமக-விற்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ள நிலையில் தேமுதிக உடனும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முடிவெடுக்க உள்ளனர்.

  இதேப் போன்று திமுக-வும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. 5 தொகுதிகள் கேட்டுள்ளோம், நாளை தான் முடிவு தெரியும் என்று காதர் மொகதீன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனிதநேய மக்கள் கட்சி உடனும் திமுக தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

  திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவினர் உடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல் சமது , பொருளார் சபிபுல்லா கான் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  Published by:Vijay R
  First published: