சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 : கோவையை கைப்பற்றும் அதிமுக... திமுகவிற்கு செம்ம ட்விஸ்ட்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 : கோவையை கைப்பற்றும் அதிமுக... திமுகவிற்கு செம்ம ட்விஸ்ட்

முக ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    கோவை சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் திமுக 1 தொகுதியில் மட்டுமே முன்னிலையில். அதிமுக கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை திமுக கூட்டணி 144 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 89 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பல தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

    கோவை சட்டமன்ற தொகுதிகளை பொறுத்த வரை அதிமுக-வே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த முறை திமுக வெற்றி பெற்ற சிங்காநல்லூர் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் ஜெயராமன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ கார்த்தி அங்கு பின்னடவை சந்தித்துள்ளார்.

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார். இதனால் கோவையில் அதிமுக 8 இடங்களிலும், திமுக மற்றும் மநீம தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் மட்டும் திமுக முன்னிலையில் உள்ளதால் மற்ற தொகுதி திமுக வேட்பாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
    Published by:Vijay R
    First published: