Palladam : பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி ஒரு பார்வை

Palladam : பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி ஒரு பார்வை

பல்லடம்

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளும், 28 ஊராட்சிகளையும் கொண்டதாகும். தொகுதியில் கொங்கு வேளாளர், தலித் மற்றும் நாயக்கர் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்

  • Share this:
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று பல்லடம் தொகுதி. 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.மாவட்டத்தில் பெரிய சட்டப்பேரவைத் தொகுதி இது. பல்லடத்தின் பிரதான தொழில்களாக, கறிக்கோழி பண்ணை, விசைத்தறிகூடங்கள், நூற்பாலைகள் மற்றும் விவசாயம் ஆகியவை மக்களின் பிரதானத் தொழில்களாகும்.

    பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளும், 28 ஊராட்சிகளையும் கொண்டதாகும். தொகுதியில் கொங்கு வேளாளர், தலித் மற்றும் நாயக்கர் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

    திருப்பூர் வட்டம் (பகுதி): முதலிபாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, முத்தணம்பாளையம், இடுவாய், உகயனூர், தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அலகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம், பொங்கலூர், மடப்பூர், காட்டூர், வி.கள்ளிபாளையம், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வி.வடமலைபாளையம் கிராமங்கள், ஆண்டிபாளையம் (சென்சஸ் டவுன்), மங்கலம்(சென்சஸ் டவுன்), முருகன்பாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வீரபாண்டி (சென்சஸ் டவுன்),

    அரசு மருத்துவமனை பல்லடம்


    பல்லடம் தாலுக்கா (பகுதி):பூமலூர், வேலம்பாளையம், நாரணபுரம், கரைபுதூர், கணபதிபாளையம், பல்லடம், கக்கம்பாளையம், இச்சிப்பட்டி, கோடங்கிபாளையம், பணிக்கம்பட்டி, வடுகபாளையம், சிட்டம்பலம், அனுப்பட்டி, கஸ்பா, அய்யம்பாளையம், கரடிவாவி, பருவை, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி மற்றும் கே.கிருஷ்ணபுரம் கிராமங்கள், செம்மிபாலையம் (சென்சஸ் டவுன்) மற்றும் பல்லடம் (நகராட்சி).

    வாக்காளர்களின் எண்ணிக்கை

    ஆண் வாக்காளர்கள் :                              187926

    பெண் வாக்காளர்கள் :                            187852

    மூன்றாம் பாலின வாக்காளர்கள்:               60

    மொத்தம் :                                                      375838 வாக்காளர்கள் உள்ளனர்.

    தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் 

    1957  பி. எஸ். சின்னதுரை (பிரஜா சோசலிச கட்சி)

    1962 செங்காளியப்பன் (காங்கிரஸ்)

    1967 கே. என். கே. கவுண்டர் (பிரஜா சோசலிச கட்சி)

    1971 கே. என். குமாரசாமி  (பிரஜா சோசலிச கட்சி)

    1977 பி. ஜி. கிட்டு (அ.தி.மு.க)

    1980 பரமசிவ கவுண்டர் (அ.தி.மு.க)

    1984 பரமசிவ கவுண்டர்  (அ.தி.மு.க)

    1989 மு. கண்ணப்பன் (தி.மு.க)

    1991 கே. எஸ். துரைமுருகன் (அ.தி.மு.க)

    1996 எஸ். எஸ். பொன்முடி (தி.மு.க)

    2001 எஸ். எம். வேலுசாமி (.அ.தி.மு.க)

    2006 எஸ். எம். வேலுசாமி (அ.தி.மு.க)

    2011 பரமசிவம் (அ.தி.மு.க)

    2016 தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்கள் விவரம்:

    1. அ. நடராஜன்- அ.தி.மு.க- 1,11,866 வாக்குகள்

    2. சு. கிருஷ்ணமூர்த்தி- தி.மு.க 79,692 வாக்குகள்

    3. க.முத்துரத்தினம்- ம.தி.மு.க 14,841 வாக்குகள்

    4. எஸ்.குமார்- பா.ம.க- 2,292 வாக்குகள்

    5. சு.தங்கராஜ்- பா.ஜ.க 13127 வாக்குகள்

    6. த.வேலுச்சாமி- நாம் தமிழர்- 2,911 வாக்குகள்


    பல்லடம் விசைத்தறி


    தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக பிரஜா சோசியலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக அ.தி.மு.க வேட்பாளரே தொடர்ந்து வெற்றிபெற்று வரும் தொகுதி இது. பிரஜா சோசியலிஸ்ட் கட்சி 3முறையும், தி.மு.க 2முறையும், அ.தி.மு.க 8 முறையும், காங்கிரஸ் 1முறையும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது, பல்லடத்தின் 14-வது சட்டப்பேரவை உறுப்பினராக அ.தி.மு.க கரைப்புதூர் அ. நடராஜன் உள்ளார்.

    ஊராட்சி பகுதிகளில் சாலைகள், நிழற்குடைகள், நியாய விலைக்கடை கட்டடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு கல்லூரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது. 2-வது கூட்டுக்குடிநீர்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது பல்லடம் மக்களின் பல ஆண்டு கால அதிருப்தி.

    பல்லடம் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துமனையை தரம் உயர்த்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்விதமாக, சாலைவசதிகளை விரிவுபடுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுச்சாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும்.

    பல்லடம் விசைத்தறி


    மக்களின் எதிர்பார்ப்பு:

    பல்லடம்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்கும் விதமாக சாலை மையத் தடுப்புகள் அமைக்க வேண்டும். பல்லடம் -மங்கலம் சாலை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாநகர் தொடங்கி- பனப்பாளையம் பிரிவு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும், பல்லடத்தில் மின்மயானக் கட்டிடம்  அரைகுறையாக நிற்கிறது ஆண்டுக் கணக்கில்.

    பிஏபி விரிவுபடுத்தப்படுமா?

    பல்லடம் தெற்கு பகுதி கிராமங்களான காமநாயக்கன்பாளையம், பணிக்கம்பட்டி, வெங்கிட்டாபுரம், அனுப்பட்டி, அய்யம்பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் பி.ஏ.பி. திட்டம் இல்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக பிஏபி பாசன விரிவை எதிர்பார்த்துள்ளனர். ஆகவே பிஏபி திட்டத்தை தொகுதியின் பல்வேறு கிராமங்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.

    பல்லடம் பகுதியில் பிரதானத் தொழிலாக விசைத்தறி உள்ளது. தொழிலை நசிவடையச் செய்யும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடாத்துணிகளை விற்பதற்கு, தனிச்சந்தை உருவாக்க வேண்டும். பண்ணைகளில் கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வெயில் காலங்களில், கறிக்கோழி பண்ணைகளின் தேவைகளை நிறைவேற்றித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு, மானியத்தில் தீவனங்கள் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் இங்குள்ள விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.

    செய்தியாளர்: பாலாஜி பாஸ்கர்
    Published by:Ramprasath H
    First published: