அமமுக கூட்டணியில் போட்டியிடும் ஓவைசி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அமமுக கூட்டணியில் போட்டியிடும் ஓவைசி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அசாதுதீன் ஓவைசி

அமமுக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  அமமுக கூட்டணியில் இருக்கும் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ இத்திஹாதுல் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் மட்டுமில்லாது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணி மற்றும் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள நீதி மய்யம் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை  முடித்து வேட்பாளர்களும் அறிவிக்ப்பட்டுள்ளனர்.

  அமமுக கூட்டணியில் அசாதுதின் ஓவைசி கட்சியும் இடம்பிடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில அமமுக கூட்டணியில் இருக்கும் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலைியல் தற்போது வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஓவைசி கட்சி வேட்பாளர்கள்

  வாணியம்பாடி - வக்கீல் அஹமத்
  சங்கராபுரம் - முஜிபுர் ரஹமான்
  கிருஷ்ணகிரி - அமீனுல்லா
  Published by:Vijay R
  First published: