அதிமுக-வின் கோட்டையான கொங்கு மண்டலத்திற்கு குறிவைக்கும் பாஜக.. தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?

அதிமுக-வின் கோட்டையான கொங்கு மண்டலத்திற்கு குறிவைக்கும் பாஜக.. தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?

ஓபிஎஸ்- இபிஎஸ்

திருப்பூர், நீலகிரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், பாஜக குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 • Share this:
  அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், பாஜக முக்கிய தொகுதிகளை கேட்பதாலேயே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சூழலில், கோவையில் மொத்தமுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 அதிமுக வசமும்,  சிங்காநல்லூர் தொகுதி மட்டும் திமுக வசமும் உள்ளது.

  இந்நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, கோவையில் 5 சட்டமன்ற தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  கொங்கு மண்டலத்தில் பாஜக சற்று கூடுதல் பலத்துடன் இருப்பதால், குறிப்பிட்ட 5 தொகுதிகளில் 3 தொகுதிகளையாவது பெறவேண்டும் என்பதில் பா.ஜ.க தலைமை முனைப்பாக இருக்கின்றது.

  அதன்படி, கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், கிணத்துகடவு தொகுதியி்ல் பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை, கோவை வடக்கு தொகுதியில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கவுண்டம்பாளையம் தொகுதியில் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வக்குமார் மற்றும் சூலூர் தொகுதியில் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் ஆகியோரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இதேபோன்று, திருப்பூர், நீலகிரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், பாஜக குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  கொங்கு மண்டல தொகுதிகளை பாஜகவிற்கு வழங்கினால், பல முக்கிய பிரமுகர்கள் அதிருப்தி அடைவர் என்பதால், அதிமுக இதற்கு தயக்கம் காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  Published by:Vijay R
  First published: