Tamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
Tamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
சுனில் அரோரா
Tamil Nadu Election 2021 |தமிழகத்தில் அதிக அளவு தேர்தல் செலவு நடக்கும் என்பதால், இரண்டு செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே-2 நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து வருகிறார்.
அதன் நேரலை காட்சிகள்...
அப்போது, 5 மாநில தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டும் தபால் வாக்கு அளிக்கலாம் என்றார். மேலும் தமிழகத்துக்கு செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகம் - தேர்தல் அட்டவணை வெளியீடு
ஒரே கட்டமாக தேர்தல் 234 தொகுதிகள்
1. வேட்பு மனு தாக்கல் துவக்கம்: மார்ச் 10
2.வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 20
4. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 6
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.