இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி

8 இடங்களில் வென்றால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலையில், தற்போது வரை 10 இடங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - அதிமுக இடையே கடும் போட்டி
எடப்பாடி பழனிசாமி | ஸ்டாலின்
  • News18
  • Last Updated: May 23, 2019, 12:58 PM IST
  • Share this:
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்குமா? என்பதை தீர்மானிக்கும் வகையில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில், சற்று நேரத்தில் அதிமுக விறுவிறுவென முன்னிலைக்கு வந்தது.

8 இடங்களில் வென்றால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்ற நிலையில், தற்போது வரை 10 இடங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

திமுக 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனினும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்