உங்க வீட்டில் அரசு கேபிள் கனெக்ஷனா? கட்டணம் குறித்த இந்த அறிவிப்பை படிங்க...

சந்தாதாரர்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தாத் தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்க வீட்டில் அரசு கேபிள் கனெக்ஷனா? கட்டணம் குறித்த இந்த அறிவிப்பை படிங்க...
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 21, 2020, 6:01 PM IST
  • Share this:
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவன சேவைக்கு கேபிள் ஆபரேட்டர்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வந்த நிலையில்,  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 16,712 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35,64,589 விலையில்லா SD செட்டாப் பாக்ஸ்களையும், 3,728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38,200 HD செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கியுள்ளது.

தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் ரூ.140+18 % வரி என்ற மாதக்கட்டணத்தில் 61 கட்டணச் சேனல்களும், 137 கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


சந்ததாதாரர்களுக்கு SD செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமலும், HD செட்டாப் பாக்ஸ்கள் ரூ.500 என்ற குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. சந்தாதாரர்கள் மாத சந்தாக் கட்டணமாக ரூ. 140+18 % வரி மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. கூடுதல் தொகை வசூல் செய்வதாக புகார் தெரிவிக்க வேண்டுமென்றால்
இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800-425-2911-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

படிக்க: ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இந்நிறுவனத்திடமிருந்து இலவசமாக பெறும் SD செட்டாப் பாக்ஸ்களை சந்தாதரர்களுக்கு தொகை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக வழங்க வேண்டும்.

மேலும், சந்தாதாரர்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தாத் தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக் கூடாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதிக தொகை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading