Home /News /tamil-nadu /

பாஜக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: அண்ணாமலை அதிரடிக்கு காரணம் என்ன?

பாஜக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: அண்ணாமலை அதிரடிக்கு காரணம் என்ன?

அண்ணாமலை

அண்ணாமலை

 உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத பாஜக மாவட்ட தலைவர்கள், தங்கள் பதவியில் இருந்து தாங்களே விலகி கொள்வது நல்லது என்று தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

    பாஜகவில் 8 மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு நீக்கி அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். கட்சியை சீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி மாவட்டங்களில், 8 மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர், நிர்வாகிகள். அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக மாவட்ட பொறுப்பாளர்களை தமிழக பாஜக நியமித்துள்ளது.

    அதன்படி திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு, வடசென்னை மேற்கு, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய 8 கட்சி மாவட்டங்களுக்கான தலைவர் மற்றும் நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல் கமிட்டிகள் என அனைத்தும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக பொறுப்பாளர்களாக நெல்லை - கட்டளை ஜோதி, நாகை - டி.வரதராஜன்,   சென்னை மேற்கு- டி.என்.பாலாஜி, வடசென்னை மேற்கு- மனோகரன், கோவை நகர்- ஏ.பி.முருகானந்தம், புதுக்கோட்டை - செல்வம் அழகப்பன், ஈரோடு வடக்கு- எஸ்எம் செந்தில்குமார், திருவண்ணாமலை வடக்கு- சி.ஏழுமலை ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? டிடிவி தினகரன் கேள்வி


    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பின்னர், சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது,   உள்ளாட்சி தேர்தலில், நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாத மாவட்ட தலைவர்கள், தங்கள் பதவியில் இருந்து தாங்களே விலகி கொள்வது நல்லது என்றும் இல்லையென்றால் தான் கட்சியில் இருந்து நீக்குவேன் என்றும் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுகக்ப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி