Home /News /tamil-nadu /

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வேதநத்தம் பகுதியில் 4cm மழையும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    மாலதீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசு வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Published by:Sankar
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி