ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சூறைக்காற்று எச்சரிக்கை.. சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 6 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்!

சூறைக்காற்று எச்சரிக்கை.. சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 6 மாவட்டங்களில் கனமழை அலெர்ட்!

மழை

மழை

இன்று தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கில் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இது 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்; சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Chennai rains, Weather News in Tamil