மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதி!

அனைத்துக்கட்சி கூட்டம்

மேகதாது அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • Share this:
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்  தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பது உட்பட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் செயலால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய சூழலில், இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழக  நீர்வளத்துறை அமைச்ச ர் துரைமுருகன் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மனோஜ் பாண்டியன்,  காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மதிமுக சார்பில் சின்னப்பா, பூமிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன், ரவிக்குமார், பாஜக சார்பில்  நயினார் நாகேந்திரன், துரைசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், சண்முகம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள்பங்கேற்றனனர்.

இதையும் படிங்க: அரசியலுக்கு இனி வரவே மாட்டேன் - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு...


இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அவை;


தீர்மானம் 1: மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம்

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது.

மேலும் படிக்க: சசிகலாவின் டார்க்கெட்.. காய் நகர்த்தும் தினகரன்.. ஆக்‌ஷன் எடுக்கும் அதிமுக - குழப்பத்தில் தொண்டர்கள்....


தீர்மானம் 2: தமிழக அரசு மேற்கொள்ளும்  நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு
இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தீர்மானம் 3:  தீர்மானத்தை மத்திய அரசிடம் அளிப்பது; சட்ட நடவடிக்கை மேற்கொள்வது

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது.

Published by:Murugesh M
First published: