தமிழகத்தில் மார்ச் மாதத்தில் தற்போதுவரை 1000 மாதிரிகளின் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 99 சதவீதம் BA.2 வகை ஒமைக்ரான் தான் தமிழகத்தின் காணப்படுவது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என பல கண்டங்களில் கொரோனா புதிய அலைகள் ஏற்பட்டு வருகின்றன. BA.2 என்ற உருமாறிய ஒமைக்ரான் தான் இந்த அலைகளுக்கு காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும் இங்கும் 99% இந்த உருமாறிய கொரோனாவே பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்டாவின் தாக்கம் மெல்ல குறைய தொடங்கி ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தது. ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலைக்கு BA.1 வகை ஒமைக்ரான் காரணமாக இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபருக்கு தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: 64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? மாணவன் உயிரிழப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்
தற்போது BA.2 வகை ஒமைக்ரான் தமிழகத்தில் பரவி வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து மாதத்துக்கு 1000 மாதிரிகள் மரபணு பரிசோதனை செய்யப்படுகின்றன. மார்ச் மாதம் செய்யப்பட்ட பரிசோதனையில் 99% BA.2 வகை ஒமைக்ரானே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் நோய் அறிகுறிகளில் எந்தவித மாற்றம் இல்லாததால் இது குறித்த பதட்டம் தேவையற்றது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.