Home /News /tamil-nadu /

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஆலங்கட்டி கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் ஆலங்கட்டி கனமழைக்கு வாய்ப்பு...!

மழை

மழை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் தேனி, மதுரை, தென்காசி, நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீனவர்களுக்கான எச்சரிக்கை : அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை : அடுத்த 3 நாட்களுக்கு மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர், திருத்தணி, ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி முதல் 41 டிகிரி வரை இருக்கும் என்பதால், முற்பகல் 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரையில் விவசாயிகளும், பொதுமக்களும் திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 செ.மீ மழையும் , மதுரையில் 5 செ.மீ மழையும், தேவகோட்டையில் 4 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிவலோகம், பெருஞ்சாணி பகுதியில் 3 செ.மீ மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை அதிகாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மதியத்திற்கு மேல் வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 
Published by:Sheik Hanifah
First published:

Tags: Weather Update

அடுத்த செய்தி