குடிபோதையில் 7 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்து துன்புறுத்திய கொடுமை

Youtube Video

வேலைக்கு செல்லாமல் தினமும் மதுபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 • Share this:
  குடிபோதையில் 7 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரை மணி நேரத்திலேயே சிறுமியை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். நியூஸ் 18 செய்தியாளர் அளித்த தகவலின்பேரில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

  பெரம்பலூர் தீரன் நகரில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் மனைவி சரண்யா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த நிலையில், வேலைக்கு செல்லாமல் தினமும் மதுபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

  இதனால், மனைவி சரண்யா தனது இளைய மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்த மூத்த மகள் விஷ்மிகாவை ரமேஷ் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

   

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: