குடும்ப தலைவிக்கு ரூ.1000: புதிய ரேஷன் கார்டு பெற குவிந்த விண்ணப்பங்கள்!

கோப்புப் படம்

கடந்த மே 10ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுக்கு ஏறக்குறைய 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து இவர்கள் நியாயவிலை கடைகளில் பொருட்களை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய்  வழங்கப்படும் என திமுக அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

  தி.மு.க ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், கொரோனா இழப்பீடு 4,000 ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனவே, குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பாணை வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமியும் கூறியிருந்தார்.

  இதையும் படிங்க: ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்- மதுரையில் ‘பலே’ ஆஃபர்!


  ரேஷன்கார்டில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத் தலைவி புகைப்படம் இருந்தால் மட்டுமே 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்ற வதந்தி பரவியது. இதையடுத்து  ரேஷன் கார்டில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல், புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மேலும் படிக்க: கொரோனா நிவாரண தொகை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!


  கொரோனா நிவாரண தொகை தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், நிவாரண தொகை பெறாதவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மே 10ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுக்கு ஏறக்குறைய 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு  குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இவர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து புதிய அட்டைத் தாரர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: