• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி

அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகத்தில் கொரோனா 5 % கீழ் உள்ளதாக தெரிவித்த ராதாகிஷ்ணன், தஞ்சை டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சென்னை மற்றும் சென்னையை சுற்றி இருக்கக் கூடிய சில பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்து இருப்பதாக  கூறினார்

  • Share this:
    அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  என்று  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வரும் 6 வாரங்கள் விரமான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை முழுமையாக தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 91.26 லட்சம் போஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

    ஜனவரி மாதம் 1.05 லட்சம், பிப்ரவரி மாதம் 3.50 லட்சம், மார்ச் மாதம் 25.73 லட்சம், ஏப்ரல் மாதம் 28.22 லட்சம், மே மாதம் 30 லட்சம், ஜூன் மாதம் 57  லட்சம், ஜூலை மாதம் 67  லட்சம், ஆகஸ்ட் மாதம் 91  லட்சம் என தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தமிழக அரசு தரப்பில் இதுவரை 3.97 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  தனியார் மருத்துவமனைகளில் 23. 74 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 4.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது என்றுஅவர் தெரிவித்தார்.

    3.20 கோடி முதல் தவணை தடுப்பூசி செலுத்தல்

    முதல் தவணையாக 3.20 கோடி தடுப்பூசிகளும் இரண்டாவது தவணையாக 94 லட்சமும் செலுத்தப்பட்டுள்ளது.  கர்ப்பிணி தாய்மார்களுக்கு 4.4 லட்சம், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3.48 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1.90 லட்சம், ஆதரவற்றோர் 2,124 பேருக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 1754 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 73 சதவீதமும், திருப்பூரில் 67சதவீதமும், சென்னையில் 65 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி சென்னையில் 32 சதவீதமும், நீலகிரியில் 29 சதவீதமும், கோவையில் 25 சதவீதமும், பூந்தமல்லியில் 23 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்


    கேரள மாநிலத்தை ஒட்டிய மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம்

    மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கக் கூடிய தூத்துக்குடி, கடலூர், நெல்லை திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி 40% மட்டுமே செலுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணர் கூறினார்.

    இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசி இன்னும் போடலியா....? இன்று மெகா கேம்ப்.. மறக்காம போட்டுக்கோங்க!


    இதேபோன்று கேரள மாநில எல்லை மாவட்டங்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி குறைவாக இருக்கும் மாவட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்றாம் அலை வராமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த ராதாகிஷ்ணன்,  ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை 222 இடங்களில் நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்   தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஆக்சிஜன் படுகைகள் இருப்பதாகவும் கூறினார்.

    தடுப்பூசி  கிடைக்கும்போதே போட்டுக்கொள்வது நல்லது

    தமிழகத்தில் கொரோனா 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளதாக தெரிவித்த ராதாகிஷ்ணன், அதேவேளையில்,  தஞ்சை டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சென்னை மற்றும் சென்னையை சுற்றி இருக்கக் கூடிய சில பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்து இருப்பதாக  கூறினார்.

    இதனை கட்டுப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தவணை தவறிய 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறடு என்றும் தடுப்பூசி கிடைக்கும்போதே மக்கள் அதனை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் படிக்க: மத்திய அரசின் ட்விட்டர் கணக்கில் பெரியாரை பாராட்டி பதிவிட்ட ட்வீட் அரைமணி நேரத்தில் நீக்கம் - சர்ச்சையில் சிக்கிய எல்.முருகன் அமைச்சகம்


    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு உள்ள 6.06 கோடி நபர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குள்ளாகவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த தமிழக சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்த அவர்,  மழைக்காலம் துவங்க உள்ளதால் மழையால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: