• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 16 லட்சம் பேர் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தவில்லை: சென்னையில் அதிகம்

தமிழகத்தில் 16 லட்சம் பேர் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தவில்லை: சென்னையில் அதிகம்

தடுப்பூசி

தடுப்பூசி

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 6.6 கோடி பேரில் 2.15 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 53.5 லட்சம் பேர் அதாவது 9% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில்  9% பேர் மட்டுமே கொரோனா 2வது தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என்பதும்  16 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லை.

தமிழகத்தில் கடந்த ஆண்டு  தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தற்போதுவரை வைரஸ் பரவலுக்கு முடிவு கிடைக்காமல் உள்ளது.  அதேவேளையில், நடப்பாண்டு ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திய கொண்டவர்களில் 16 லட்சத்து 12 ஆயிரத்து 623 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை. இதில் 28 நாட்களுக்கும் மேலாக கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் 5,64,048 பேர் ஆவர்.  84 நாட்களுக்கும் மேலாக கோவிஷீல்டு இரண்டாவது தவணையை 10,48,575 பேர்  செலுத்திக் கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் சுமார் 3 லட்சம் பேரும் அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பேரும் இரண்டாவது தவணையை தவறவிட்டுள்ளனர். சென்னையில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 502 பேர் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை. அதே போன்று ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 19 பேர் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் சென்னையில் செலுத்திக் கொள்ள வில்லை. எனவே சென்னையில் மொத்தம் இரண்டு லட்சத்து 97 ஆயிரத்து 521 பேர் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.

படிக்க: அம்மா இருசக்கர வாகன திட்டம் என்னாச்சு? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்


இதற்கு அடுத்தபடியாக  உள்ள கோவை மாவட்டத்தில்  45 ஆயிரத்து 759 பேர் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை.  86 ஆயிரத்து 35 பேர் கோவிஷீல்டு இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள வில்லை   எனவே மொத்தம் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 794 பேர் தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளவில்லை.

திருச்சியில் 14,661 பேர் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளவில்லை. 40,625 பேர் கோவிஷீல்டு இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளவில்லை. மொத்தம் திருச்சியில் 55826பேர் இராண்டாவது தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை.

இதையும் படிங்க: 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி : யாருக்கு முன்னுரிமை


இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நியூஸ்18க்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 6.6 கோடி பேரில் 2.15 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 53.5 லட்சம் பேர் அதாவது 9% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 16 லட்சம் பேர் உள்ளனர்.

Line list,  அதாவது தடுப்பூசி மையங்கள் வாரியாக உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ளாதவர்களின் பட்டியல் எடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சுகாதார துணை இயக்குனர்கள் மூலமாக அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தும் பணி நடைபெறுகிறது. ஆனால் இப்படி பட்டியல் எடுப்பது கடினமானதாகும் எனவே பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசி தான் முழுமையான பாதுகாப்பு என்பதை உணர்ந்து தாங்களாகவே தங்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: சென்னை லேசான நில நடுக்கம்- பொதுமக்கள் பீதி!


கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் இரண்டாவது தவணைக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக ஒருவருக்கு கோவாக்சின் தான் உகந்தது என்ற பட்சத்தில் மட்டும் அவர்களுக்கு முதல் தவணை வழங்கப்படும்.
தற்போது 3 லட்சத்துக்கும் மேல் கோவாக்சின் கையிருப்பு உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: