தமிழகத்தில் ஒரேநாளில் 13ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று.. 78 பேர் உயிரிழப்பு

கொரோனா

கொரோனா சிகிச்சை பலனின்றி 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,395 ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரேநாளில் 13776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,”தமிழகத்தில் புதிதாக 13776 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாகாக 3842 பேருக்கு செங்கல்பட்டில் 985 பேருக்கும் கோவையில் 889 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 95048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 31,170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 8078 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,43,044 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,395 ஆக அதிகரித்துள்ளது.
    Published by:Ramprasath H
    First published: