ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முன்னதாக கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த புதன் அன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரங்கள் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வெல்லும் சொல் நிகழ்ச்சியில் அன்வர் ராஜா அளித்த பிரத்யேக பேட்டியில், தான் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது உண்மைதான் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக அவை தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு பிறகு அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்துவந்தது.  இந்நிலையில், அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டதால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

First published: