ஊரடங்கு நீட்டிப்பு - பொது போக்குவரத்து & இ-பாஸ் முறையில் என்னென்ன மாற்றங்கள்?

LockDown | மாவட்டங்களுக்குள் இயங்கி வந்த பொது போக்குவரத்து மற்றும் இ-பாஸ் நடைமுறைகளிலும் மாற்றங்கள் உள்ளன.

ஊரடங்கு நீட்டிப்பு - பொது போக்குவரத்து & இ-பாஸ் முறையில் என்னென்ன மாற்றங்கள்?
கோப்பு படம்
  • News18
  • Last Updated: June 30, 2020, 7:50 AM IST
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும். ஜூலை 6-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் 19-ம் தேதிக்கு முன்னர் அமலிலிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்குள் இயங்கி வந்த பொது போக்குவரத்து மற்றும் இ-பாஸ் நடைமுறைகளிலும் மாற்றங்கள் உள்ளன.





படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - கிராம சிறு கோவில்கள் உள்பட எவற்றுக்கெல்லாம் அனுமதி...?

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?








பொது பேருந்து போக்குவரத்து :

மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இ-பாஸ் முறை :

அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் 30.6.2020 வரை வழங்கப்பட்ட இ-பாஸ் 5.7.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.

ஒரு மாவட்டத்திலிருந்து வேறொரு மாவட்டத்திற்கு அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இப்பணிகள் சம்பந்தமாக அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களால் இ-பாஸ் வழங்கப்படும்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading