• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கருணாநிதி, ஜெயலலிதாவின் கலவையாக இருக்க விரும்புகிறேன்! தமிழிசை சௌந்தராஜன்

கருணாநிதி, ஜெயலலிதாவின் கலவையாக இருக்க விரும்புகிறேன்! தமிழிசை சௌந்தராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழிசை சௌந்தர்ராஜன்

என்னை மேதகு என்று சொல்வதைவிட பாசமிகு தமிழிசை சௌந்தரராஜன் என்று சொல்லுவது தான் எனக்கு மகிழ்ச்சி.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கலந்த கலவையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  சென்னை தி.நகரிலுள்ள கிருஷ்ண கான சபாவில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  அந்த நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘தமிழிசை சௌந்தரராஜன் கடின உழைப்புக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
  என் மனதில் நீங்க இடம் பிடித்தவர். பா.ஜ.க மிகச் சிறிய கட்சியாக இருந்தபோது 10 ஆண்டுக்கு முன் கட்சி கொடியை காரில் கட்டிக்கொண்டு காலை 5 மணிக்கே கட்சி பணியாற்ற புறப்பட்டுவிடுவார். அப்போதே நான் விஜயகாந்த்திடம் சொல்லுவேன், மிகப் பெரிய வெற்றி அவருக்கு கிடைக்கும் என்று. எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு கொடுத்த வேலையை, அவர்செய்தற்காக இன்று அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  யாராக இருந்தாலும், பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தால், அதற்கான பலன் கிடைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். கட்சி தலைவராக இருந்தபோது மோடி மற்றும் அமித்ஷா கொடுத்த பல்வேறு அறிவுரைகளை அவர் ஆளுநராக இருக்கும் இந்த தருணத்தில் பயன்படுத்தி வெற்றிபெறுவார்’ என்று தெரிவித்தார்.

  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, ‘இந்த பொறுப்பு அறிவிக்கபட்ட உடனே நான் சொன்னேன். என்னை மேதகு என்று சொல்வதைவிட பாசமிகு தமிழிசை சௌந்தரராஜன் என்று சொல்லுவது தான் எனக்கு மகிழ்ச்சி.

  மூப்பனார் அவர்களைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். ஞானதேசிகனை இங்கு பார்க்கும் போது மூப்பனார் மற்றும் ஜி.கே.வானை இங்கே பார்ப்பது போல் இருக்கிறது. தமிழுக்கு - தெலுங்குக்கும் ஒரு பாலம் இருக்கிறது. வேறு வேறு அல்ல.

  எம்.ஜி.ஆர் எனது திருமணம் அன்று சொன்னார், நான் அரசியல்வாதியாக வருவேன் என்று. துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் புலமையில் கருணாநிதி போலவும், எளிமையாக பழக கூடிய விஜயகாந்த் போலவும், சமூக அக்கறையில் இராமதாஸ் போலவும் , பேச்சாற்றலில் வைகோ போலவும் இவர்களைப் போன்ற நல்ல கலவையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

  அக்கா என்ற பெயர் எனக்காகவே இருந்தது.
  எனக்கு மகிழ்சியாக இருக்கிறது. நான் சாதாரண பெண். எல்லாம் பெண்கள் போலவும் சேலைக்கும், ஜிமிக்கிகும், பூவுக்கும் ஆசைபடுகிற பெண். ஆனால் கொடுத்த வேலையை சரியாக செய்ய கூடிய பெண்.

  எனது உழைப்பைப் பற்றி தெரிந்து எனக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவனுக்கும், ஆளுபவனுக்கும் எனது நன்றிகள். தெலுங்கானா ராஜ்பவனில் காலை 5.30 மணிக்கு அனைத்து பணியார்களுக்கும் யோகா பயிற்சி கொடுக்கபட்டு வருகிறது.

  எந்த வேலை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும். எந்த மொழியாக இருந்தாலும் கற்றுக்கொள்வது நன்று. அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கானா மாநிலத்தை உயர்ந்த நான் பணியாற்றுவேன்.

  முன்பு நான் தனியாக எங்கு வேண்டுமானாலும் செல்வேன். என் பின்னால் யாரும் இருக்க மாட்டார்கள். நான் எனது வாகட ஓட்டுனர் மட்டும் தான் இருப்பார். ஆனால் இப்போது காவல்துறை அதிகாரிகள் என் கூடவே இருக்கிறார்கள். எனக்கு பாதுகாப்பு இருந்தாலும் எனது சுதந்திரத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எப்போதும் பாரதியார் பாடல் என்னை வழி நடத்தி கொண்டு இருக்கும்’ என்று தெரிவித்தார்.

  அதேபோல, இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.மணி, ஞானதேசிகன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தமிழிசை வாழ்த்தினர்.

  Also see:

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: