புதிய கல்விக் கொள்கைப் பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

ஆங்கில வழி கல்வி கற்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் இருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கைப் பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்
சூர்யா, தமிழிசை சௌந்தரராஜன்
  • News18
  • Last Updated: July 15, 2019, 4:51 PM IST
  • Share this:
புதியக் கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் சூர்யா விமர்சனம் செய்துள்ளார் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சாலிகிராமத்தில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா , கல்வியாளர்கள் வசந்தி தேவி, பேராசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சூர்யா, ‘அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?


அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். கல்வி முறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும்’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

சூர்யாவின் இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சூர்யாவின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்.

ஆனால், எதுவுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும். ஆங்கில வழி கல்வி கற்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் இருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்துக்கள் இல்லாமல், அரசு பள்ளி எண்ணிக்கை குறையாமல் அரசு பார்த்துக் கொள்ளும்’ என்று தெரிவித்தார்.

சூர்யாவின் கருத்து குறித்து பேசிய பா.ஜ.க தமிழிசை சௌந்தர்ராஜன், ‘புதிய கல்விக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் பலரும் விமர்சனம் செய்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading