தூத்துக்குடியில் மக்கள் என்னை உள்ளூர் வேட்பாளராக பார்க்கின்றனர் - தமிழிசை

தூத்துக்குடி மக்கள் தம்மை உள்ளூர் வேட்பாளராக பார்ப்பதால், தாம் வெற்றிபெறுவது உறுதி என்றும் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

news18
Updated: April 1, 2019, 4:57 PM IST
தூத்துக்குடியில் மக்கள் என்னை உள்ளூர் வேட்பாளராக பார்க்கின்றனர் - தமிழிசை
தமிழிசை சவுந்திரராஜன்
news18
Updated: April 1, 2019, 4:57 PM IST
தூத்துக்குடியில் திமுகவினர் கிளர்ச்சியை வைத்து அரசியல் செய்ய நினைப்பதாகவும், ஆனால் தாம் வளர்ச்சியை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது, அதிமுகவுக்கு முன்பு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக, தூத்துக்குடி தொகுதிக்கு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினார்.


தற்போது தண்ணீர் பிரச்சனையை காரணங்காட்டி, திமுக தங்களை குறைகூறுவதாக அவர் விமர்சித்தார். தூத்துக்குடியில் தற்போது பதவியில் உள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் இதுவரை செய்தது என்னவென்றும் தமிழிசை சவுந்திரராஜன் வினவினார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கிளர்ச்சியை வைத்து திமுக அரசியல் செய்ய நினைப்பதாக குற்றஞ்சாட்டிய தமிழிசை, தாங்கள் வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடி மக்கள் தம்மை உள்ளூர் வேட்பாளராக பார்ப்பதால், தாம் வெற்றிபெறுவது உறுதி என்றும் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...ஐ.பி.எல் தகவல்கள்....!

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...