விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி பவளவிழா ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக் கல்லூரியின் பவளவிழா 75வது ஆண்டு துவக்க விழா தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
விழாவை, புதுச்சேரி துணைநிலை
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், உண்மையாக, கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமேனாலும் ஆளுனராக முடியும் என்பதை இந்து சமயம் எனக்கு சொல்லிகொடுத்தது, உழைக்க வேண்டும், படிக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடுதான் சொல்லிகொடுத்தது.
உலகத்தில் வளர்ந்த நாடுகளால் கூட கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்க முடியாதபோது இந்தியா தடுப்பூசியை தயாரித்து மக்களுக்கு கொடுத்தது என்றால் இந்தியாவும், தமிழகமும் இறைபூமி. இறைவனின் அருள் நமக்கு உண்டு என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு
பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.
Must Read : கொரோனா பரவல்: கோவையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு!
விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். மேகதாது பிரச்னை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரியானாலும், எந்த நதியின் நீரானாலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சரியாக கிடைக்க வேண்டும் என்பதே என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார், மயிலாடுதுறைஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.