தமிழிசை சௌந்தரராஜனுக்கு சர்வதேச தலைசிறந்த பெண்கள் விருது

தமிழிசை சௌந்தரராஜனுக்கு சர்வதேச தலைசிறந்த பெண்கள் விருது

தமிழிசை சவுந்தரராஜன்

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்க்கு சர்வதேச தலைசிறந்த 20 பெண்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
சர்வேதச பெண்கள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை பணிக் குழு சார்பில் 9-வது 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச தலைசிறந்த 20 பெண்கள் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக உலகம் முழுவதிலிலுமிருந்து 20 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் வழங்கப்பட்டது.

தமிழிசை குறித்து விருது விழாவில் அறிமுகப்படுத்தும்போது, ‘மருத்துவராக இருந்து பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உயர்ந்து பின்னர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துவருகிறார்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழிசைக்கு விருது வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்போது, ‘பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சமத்துவம் போன்றவற்றுக்கு குரல் எழுப்புவராக இருப்பதால் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: