தமிழ் என்றுமே உயிர்ப்புடன் வளமுடன் எப்பொழுதும் இருக்கும் அதை காப்பாற்றுவதற்கு ஸ்டாலின் தேவை இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், " நேற்றைய தினம் குமாரசாமி காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் கவிழ்திருக்கிறது. மக்களின் தீர்ப்பு நிறை
வேற்றப்பட்டிருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக பாஜக கட்சிக்குதான் வாக்களித்திருந்தார்கள். கர்நாடகாவிலும் தாமரை மலரும் பொழுதே தென்னகத்தில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப் பெறும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், தமிழை நாங்கள்தான் காப்பாற்றி கொண்டிருக்கிறோம் என்று ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளித்தார், ” ஸ்டாலின் கூறுவது இது தமிழ் தாய்க்கே பொறுக்காது. தமிழ் மொழி என்றும் இளமையாக இருக்கும்மொழி. தமிழை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழ் என்றுமே உயிர்ப்புடன் வளமுடன் எப்பொழுதும் இருக்கும் அதை காப்பாற்றுவதற்கு ஸ்டாலின் தேவை இல்லை” என்றார்.
தபால் துறை தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “ தபால் துறை தேர்வை பொருத்தவரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது நிர்வாக ரீதியாக ஏன் தடுக்கப்பட்டது என்றுதான். மத்திய அரசிற்கு திணிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் கிடையவே கிடையாது. அதேபோல்தான் ரயில் துறையிலும் திணிக்க மத்திய அரசு நினைக்கவில்லை. தமிழ் கொண்ட பெருமையை போற்றுவதில் பாஜக முதன்மையான கட்சியாக இருக்கும்” என்றார்.
தண்ணீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, “ ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லா இடத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு திமுகதான் காரணம். பலமுறை ஆண்ட திமுக தொலைநோக்குப் பார்வையில் நீரை சேமிப்பது எப்படி என்பதை செய்யவில்லை” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திமுக-வை சேர்ந்தவர்களின் 2-வது கொலை இது. உட்கட்சி பிரச்சினையா என்பது தெரியவில்லை. தூத்துக்குடியில் ஏற்கனவே இதுபோன்ற ஒரு கொலை நடந்திருக்கிறது. தற்போது திருநெல்வேலியிலும் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலைகள் தடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு கூறினார்.
Also see... "ஸ்விகி" முதன்மை திட்ட இயக்குநராக உள்ள திருநங்கை
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.