வடக்கும் - தெற்கும் இணைந்து செயல்பட்டால் நாடு சுபிட்சம் அடையும். கம்பன் வடமொழியை கற்காவிட்டால் கம்பராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது. எனவே இன்னொரு மொழி கற்பதை யாரும் தடுக்க வேண்டாம் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக 2 நாட்கள் விழா நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான 176-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்து மதத்தில் உள்ளது எல்லாம் அனைவரும் அறிந்ததா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அது அந்தந்த மதத்தினரின் நம்பிக்கை. நாம் எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். மற்ற மதத்தில் உள்ள நல்லதுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்.’ என்றார்
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழிசை தெலுங்கும் பேசலாம், தெலுங்கு பேசும் நண்பர்கள் தமிழும் பேசலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் தமிழகத்தில் இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். வடக்கும் - தெற்கும் இணைந்து செயல்பட்டால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என்று அன்றே சொல்லி வைத்தார்கள். தமிழ் நமக்கு உயிர்தான். ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்கும்போதுதான் தமிழில் உள்ள நல்லதை வடமொழியில் நம்மால் எடுத்துக் கூற முடியும். கம்பன் வட மொழியை கற்காவிட்டால், கம்பராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது என்றார்.
மேலும், புதிய கல்விக் கொள்கையை தமிழிலும் தாய் மொழியிலும் கற்றுக் கொள்ளுங்கள். பிற மொழியை கற்றுக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இன்னொரு மொழியை கற்பதால் வாய்ப்புகள் நமக்கு அதிகமாக இருக்கிறது. மற்றொரு மொழியை கற்பதை யாரும் தடுக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Education Policy, Puducherry Governor, Tamilisai Soundararajan