உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்!

பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

இளைஞர்கள் யாரும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம். அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரை யார் நல்லவர் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  உலகையே பதைபதைக்க வைக்கும் அளவிற்கு  இலங்கையில்  தாக்குதல் நடைப்பெற்றுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

  அப்போது பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற இந்த தாக்குதல் மூலம், உலக நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  மேலும், மூன்றாம் கட்ட தேர்தலில் மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், வன்முறையற்ற முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். குறிப்பாக கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் அதிக அளவில் வன்முறைகள் நடக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

  தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் இளைஞர்கள் யாரும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம். அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரை யார் நல்லவர் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  மேலும், மதுரையில் ஒரு பெண் அத்துமீறி வாக்குச்சாவடியில் இயந்திரங்கள் வைக்கும் இடத்திற்கு நுழைந்ததற்கு நானும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அந்தப் பெண்ணை இடைநீக்கம் செய்தது சரி, ஆனால் அவரின் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: