• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தெலங்கானா ஆளுநர் பதவியுடன் எனது அரசியல் பயணம் முற்று பெறாது: தமிழிசை சூசகம்!

தெலங்கானா ஆளுநர் பதவியுடன் எனது அரசியல் பயணம் முற்று பெறாது: தமிழிசை சூசகம்!

தமிழிசை சவிந்தரராஜன்

தமிழிசை சவிந்தரராஜன்

தான் ஆளுநர் ஆனது முதல் தெலங்கானாவில் தமிழ் ஒலிப்பதாகவும், தமிழகத்திற்கு வரும்போது தெலுங்கு ஒலிப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தெலங்கானா ஆளுநர் பதவியுடன் தனது அரசியல் பயணம் முற்றுப்பெறாது என தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என சூசமாகவும் கூறியுள்ளார்.

    தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ள, தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் சான்றோர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஆளுநருக்கும் அதிக அளவு வேலைகள் இருப்பதாகக் கூறினார்.

    தான் ஆளுநர் ஆனது முதல் தெலங்கானாவில் தமிழ் ஒலிப்பதாகவும், தமிழகத்திற்கு வரும்போது தெலுங்கு ஒலிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், தனக்கு என்றுமே ஓய்வில்லை எனவும், யாரையும் ஓய்வெடுக்க விடமாட்டேன் எனவும் கூறினார்.

    முன்னதாக பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட சில தமிழகப் பள்ளிகளில் தெலுங்கை பயிற்றுவிக்க ஒப்பந்தம் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசையிடம் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திறமையும், அறிவாற்றலும் கொண்ட தமிழிசையை ஆளுநராக கிடைத்ததற்கு தெலங்கானா மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

    மேலும், சான்றோர் பேரவை சார்பில் பல்வேறு தரப்பினரும் தமிழிசையின் உழைப்பு மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: