தொலைக்காட்சி விவாதங்களில் மீண்டும் பா.ஜ.க பிரதிநிதிகள்! பெயர்பட்டியலை வெளியிட்ட தமிழிசை
தொலைக்காட்சி விவாதங்களில் மீண்டும் பா.ஜ.க பிரதிநிதிகள்! பெயர்பட்டியலை வெளியிட்ட தமிழிசை
தமிழிசை சௌந்தர்ராஜன்
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாத காரணத்தினால் பா.ஜ.க பிரதிநிதிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்.
தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க மீண்டும் பங்கேற்கும் என்றும் பங்கேற்பாளர்கள் பெயரையும் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், தமிழகத்தில் மட்டும் பா.ஜ.கவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாத காரணத்தினால் பா.ஜ.க பிரதிநிதிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்தார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் தங்களின் உரையாடல்களில் சிறப்பாக செயல்படுமாறு கேட்டுகொள்கிறேன் ... தங்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்... @BJP4TamilNadupic.twitter.com/xfyHz89jb9
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 26, 2019
அன்றிலிருந்து தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை. இந்தநிலையில், தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க சார்பில் பங்கேற்பவர்களின் அதிகாரப்பூர்வமாக பட்டியலை தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார். அதில், வானதி ஸ்ரீநிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி.ராகவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.