சித்தப்பா ! நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...வசந்தகுமாரின் மறைவிற்கு தமிழிசை உருக்கம்

சித்தப்பா ! நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...வசந்தகுமாரின் மறைவிற்கு தமிழிசை  உருக்கம்
வசந்தகுமார் - தமிழிசை
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி, எம்.பி. வசந்தகுமார் காலமானார்.

இதுகுறித்து,  தெலங்கானா ஆளுநரும் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், வசந்தகுமாரின் அண்ணன் மகளுமான தமிழிசை சௌந்தரராஜன் தனது உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

சித்தப்பா !


நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...
என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்...

அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்...இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்...

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது...

வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது...

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் ...
கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது...

ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்...


இவ்வாறு தமிழிசை தனது இரங்கற்குறிப்பில் தெரிவித்துள்ளார்
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading