வன்முறையை தூண்டிவிடுவது திரிணாமுல் காங்கிரஸ்! மம்தா பானர்ஜிக்கு தமிழிசை கண்டனம்

மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய வன்முறை மற்றும் சூழ்ச்சி அரசியலை மட்டுமே மம்தா பானர்ஜி செய்துவருகிறார்.

news18
Updated: May 15, 2019, 8:45 PM IST
வன்முறையை தூண்டிவிடுவது திரிணாமுல் காங்கிரஸ்! மம்தா பானர்ஜிக்கு தமிழிசை கண்டனம்
தமிழிசை சௌந்தர்ராஜன்
news18
Updated: May 15, 2019, 8:45 PM IST
எல்லாத் தேர்தல்களிலும் வன்முறையைக் கட்டவிழ்ந்துவிடுவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றிருந்த பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவின் வாகனத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து, கொல்கத்தாவில் இரு தரப்பினருக்கு இடையை வன்முறையை ஏற்பட்டது. அதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அமித்ஷாவின் வாகனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ‘மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய வன்முறை மற்றும் சூழ்ச்சி அரசியலை மட்டுமே மம்தா பானர்ஜி செய்துவருகிறார். பா.ஜ.கவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத மம்தா பானர்ஜி, இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருகிறார். வன்முறை என்பது எப்போதுமே மேற்கு வங்கத்தில் அதிகம் உண்டு.

எல்லாத் தேர்தல்களிலும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். இந்த முறை மேற்கு வங்கத்தில் பா.ஜ.க மிகப்பெரிய செல்வாக்கோடு வெற்றி பெறும். கமலைப் பொறுத்தவரையில் ஆறிப்போன புண்ணாக இருந்த தீவிரவாதத்தைக் கிளறிவிட்டு ரணமாக்கி திசை திருப்பி இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...