• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் தேர்வை நீக்குவேன் என்கிறார் ஸ்டாலின்... எப்படி நீக்குவார்? - தமிழிசை கேள்வி

நீட் தேர்வை நீக்குவேன் என்கிறார் ஸ்டாலின்... எப்படி நீக்குவார்? - தமிழிசை கேள்வி

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

  • Last Updated :
  • Share this:
    நீட் தேர்வில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்து பேசாமல், எதிர்கட்சிகள் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள். ஸ்டாலின் நீட் தேர்வை எப்படி நீக்குவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில மையக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கான மேலிடப்பொருப்பாளர் முரலிதர்ராவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட இணைப்பொருப்பாளர் சி.டி.ரவி, ஹெச்.ராஜா, வானதிசீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தேர்தல் தோல்விகள் குறித்தும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, கட்சியை வழுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், ‘‘நீட் தேர்வு முடிவுகளால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்கட்சிகள் எதிர்மறையான அரசிலை செய்கின்றன. மருத்துவ சேர்கைக்கான இடங்கள் அதிகரித்துள்ளன, தேசிய அளவில் 57-வது இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. நீட் தேர்வில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்து பேசாமல், எதிர்கட்சிகள் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள். ஸ்டாலின் நீட் தேர்வை எப்படி நீக்குவார்.

    கஸ்தூரி ரங்கன் பரிந்துரையில் 3 மொழிக் கொள்கையில் மூன்றாம் மொழி குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளளாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கை 25 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.

    இது கம்ப்யூட்டர் காலம், மாணவர்களின் நலனுக்காகவே மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டது. அதிலும் எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். மொழிப் பரிமாற்றம் விருப்பமான மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்ற நல் எண்ணத்தில் முதல்வர் பதிவிட்ட ட்வீட், எதிர்கட்களின் தவறான பரப்புரையால் நீக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஓவியர் தேசிய கொடி வடிவில் பாரதியார் படம் வரைந்தால் அதையும் காவி நிறம் என விமர்சனம் செய்கிறார்கள்’’ என்று கூறினார்.

    நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கும், மாநிலங்கள் அவைக்கு தமிழகத்தில் இருத்து தேர்வாகப்போவது யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் தற்போது வரை நான்நான் தலைவர் என்றார்.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: