ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: "அடங்கி இருக்கணும்.. எரிமலையை எதிர்கொள்வேன்".. முரசொலி கட்டுரைக்கு காட்டமாக பதிலளித்த தமிழிசை!

Exclusive: "அடங்கி இருக்கணும்.. எரிமலையை எதிர்கொள்வேன்".. முரசொலி கட்டுரைக்கு காட்டமாக பதிலளித்த தமிழிசை!

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

Tamilisai soundararajan | முரசொலி எச்சரிக்கை விடுத்து வெளியிட்டிருந்த கட்டுரைக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எரிமலை வெடித்தால் தாங்கமாட்டீர்கள் என்ற முரசொலி கட்டுரைக்கு எரிமலையை எதிர்கொள்ள தயார் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

  நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், முரசொலியின் கட்டுரைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  அதில், முரசொலியின் கட்டுரையை கண்டிக்கிறேன். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு விதம் உள்ளது. ஆனால் அவர்கள் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். அந்தந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒவ்வாத கருத்துக்களை சொன்னால் இப்படி கட்டுரை எழுதுவேன் என்ற நிலை தமிழ்நாட்டில் போய் கொண்டிருக்கிறது. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பேச்சுரிமை ஆளுநர்களுக்கும் உண்டு. ஆளுநர்கள் பேசவே கூடாது என சொல்லகூடாது, அது எனது உரிமை. தெலங்கானா சென்று விட்டதால் அங்கேயே உங்களது உரிமையை வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வது தவறு. தமிழ் மண்ணில் பிறந்த எனக்கும் தமிழ்நாட்டில் உரிமை உண்டு என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து, எதிர்கட்சிகள் இருக்கையில் நீங்கள் குரல் கொடுக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சக ஆளுநராக துணை நின்றேன். ஆளுநர் பதவி என்னவென தெரியும் அதனால் அதற்கு குரல் கொடுத்தேன் என கூறினார்.

  அப்போ தமிழக ஆளுநர், கேரள ஆளுநர் அனைவரையும் காப்பாற்றுவதற்கு முன் நிற்பீர்களா என்ற கேள்விக்கு, நோயாளிகளை காப்பாற்றுவதற்கே நான் தான் முன்னிறுப்பேன். அதனால் நிச்சயம் ஆளுநர்களையும் காப்பாற்றுவேன் என கூறியுள்ளார்.

  தொடர்ந்து முரசொலியின் கடைசி வரி எரிமலை வெடித்தால் தாங்க மாட்டீர்கள் என்ற எச்சரிக்கைக்கு, எரிமலையை எதிர்கொள்ள தயார் என கூலாக பதிலளித்தார். ஏற்கனவே தமிழகத்தில் வெப்பம் மயமாக இருக்கையில், எரிமலைகள் அடங்கி இருப்பது நல்லது. பனிமலைகள் வேண்டுமானால் எங்களை போன்று உயர்ந்து நிக்கலாம். ஆனால் எரிமலைகள் அடங்கி இருப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Dr tamilisai soundararajan, Murasoli, News18 Tamil Nadu, Tamilisai Soundararajan